EThanthi - நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சார்பில் ரூ.50 லட்சம் நிவாரண உதவி - புயல் பாதிப்பு !

Flash News

நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சார்பில் ரூ.50 லட்சம் நிவாரண உதவி - புயல் பாதிப்பு !

’கஜா’ புயல் தாக்கியதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது.
சுழன்று அடித்த புயலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும்,

1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்து இருக் கின்றன.
புயலில் பலியானவர் களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவர் களுக்கு தலா ரூ.1 லட்சமும், 

சாதாரண காயம் அடைந்தவர் களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

இதே போல் உயிர் இழந்த மாடுகளுக்கு தலா ரூ.30 ஆயிரமும், ஆடுகளுக்கு ரூ.3 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார்.

புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படை யில் மீட்பு மற்றும் 

நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

புயல் சேதத்தை மதிப்பிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன

தி.மு.க அறக்கட்டளை சார்பில் ரூ.1. கோடி நிவாரன உதவி அறிவிக்கப்பட்டு உள்து.

கஜா' புயலால் கடுமை யாகப் பாதிக்கப்படட் டெல்டா மாவட்டங் களுக்கு உதவ திரையுலக பிரபலங்கள், 

அரசியல் தலைவர்கள் என பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சார்பில் ரூ.50 லட்சம் வழங்கப்படும் என அறிவிப்பு

நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் தொண்டு நிறுவனங்க ளுடன் இணைந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிகளை வழங்க வுள்ளனர்.
நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சார்பில் ரூ.50 லட்சம் நிவாரண உதவி - புயல் பாதிப்பு ! நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சார்பில் ரூ.50 லட்சம் நிவாரண உதவி - புயல் பாதிப்பு ! Reviewed by EThanthi.in on November 19, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close