EThanthi - என் வாழ்க்கை விற்பனைக்கு அல்ல - ஸ்ரேயா !

Flash News

என் வாழ்க்கை விற்பனைக்கு அல்ல - ஸ்ரேயா !

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை ஸ்ரேயா.
திருமணத்துக்கு பின்பும் நரகாசுரன் படம் மூலம் அடுத்த சுற்றுக்கு தயாராகி வருகிறார். 

அவர் அளித்த பேட்டியில், என் அடுத்த தெலுங்கு படம் எ லிட்டில் பேர்டு. முதன் முதலாக பெண் இயக்குனரின் படத்தில் நடிக்கிறேன்.

ஆணாதிக்கம் மிக்க துறையில் பெண்கள் இயக்குனர்க ளாவதை பார்க்க பெருமையாக உள்ளது. 

கேமராவுக்கு முன்பு மட்டுமல்ல பின்பும் கூட நிறைய பெண்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

இது ஹீரோயினை மையப் படுத்திய படம் என்று பல இயக்குனர்கள் என்னிடம் தெரிவிக்கிறார்கள்.

ஆனால் அந்த படத்தில் கூட பெண்ணை காப்பாற்ற ஒரு ஆணை கொண்டு வருகிறார்கள். 

அப்படி இருக்கும் போது அது என்ன பெண்களுக்கு முக்கியத்து வமான படம்?. சுவாரசியம் மற்றும் சவாலான கதைகளை தேடிக் கொண்டி ருக்கிறேன்.
திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது என்று மட்டும் என்னிடம் கேட்காதீர்கள். 

அது என் தனிப்பட்ட வாழ்க்கை. விற்பனைக்கு அல்ல. அது குறித்து நான் எப்பொழுதுமே பேச மாட்டேன். 

அதில் நான் தெளிவாக உள்ளேன் என்று கூறியிருக்கிறார்.
என் வாழ்க்கை விற்பனைக்கு அல்ல - ஸ்ரேயா ! என் வாழ்க்கை விற்பனைக்கு அல்ல - ஸ்ரேயா ! Reviewed by EThanthi.in on October 23, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close