EThanthi - கண்ணழகி நடிகைக்கு நெட்டிசன்கள் கண்டனம் !

Flash News

கண்ணழகி நடிகைக்கு நெட்டிசன்கள் கண்டனம் !

‘ஒரு அடார் லவ்’ மலையாள படம் மூலம் கண்ணடித்து காதல் விளையாட்டு நடத்திய பிரியா வாரியர் ஒரே நாளில் ஒஹோ ஹீரோயின் ஆனார்.
இந்தகாட்சி இணைய தளம் மூலம் வைரலாகி பல மாதங்கள் ஆகியும் சில பிரச்னைகள் காரணமாக அப்படம் திரைக்கு வரவில்லை.

இதனால் நொந்து போன பிரியா வாரியர் விளம்பர படங்களில் நடித்து வருகிறார். 

முன்னதாக கண்ணடித்த காட்சியில் நடித்த போது இடம் பெற்ற ஒரு பாடலால் சர்ச்சையில பிரியா சிக்கினார்.

தற்போது மற்றொரு சர்ச்சையில் அவர் சிக்கி யிருக்கிறார். 

சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக லட்சக்கணக் கானோர் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.

அவர்களுக்கு பல நடிகர், நடிகைகள் நிதியுதவி அறிவித்து வருகின்றனர். 
நடிகை பிரியா வாரியரும் தனது பங்குக்கு ரூ 1 லட்சம் கேரளா முதல்வர் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கினார்.

பின்னர் அதற்கான ரசீதை தனது இன்ஸ்டாகிராம் இணைய தள பக்கத்தில் வெளியிட்டு, 

’இந்த ரசீதை நான் இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதற்கு காரணம் பப்ளிசிட்டிக் காகவோ 

அல்லது நானும் நன்கொடை அளித்தேன் என்பதை வெளிப்படுத்து வற்காகவோ அல்ல.

இதைப்பார்த்து மற்றவர்களும் வெள்ள நிவாரணத் துக்கு உதவ வேண்டும் என்பதற் காகவே. 

இது ஏற்றுக் கொள்ள முடியாத விஷயமாக இருந்தால் என்னை தாழ்வாக விமர்சிக் காதீர்கள்’ என குறிப்பிட் டுள்ளார்.

பிரியா வாரியரின் இந்த செயலை பலர் ரசிக்க வில்லை. பப்ளிசிட்டிக் காக இன்ஸ்டாகிராமில் ரசீதை வெளியிட வில்லை 

என்று சொன்னால் பிறகு ஏன் அதை வெளியிட்டீர்கள் என கண்டனம் தெரிவித்து விமர்சித்து வருகின்றனர்.
கண்ணழகி நடிகைக்கு நெட்டிசன்கள் கண்டனம் ! கண்ணழகி நடிகைக்கு நெட்டிசன்கள் கண்டனம் ! Reviewed by EThanthi.in on September 06, 2018 Rating: 5

1 comment:

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close